Indran (B G Rajendran)
A Puducherry – born writer translator and art-critic.
இந்திரன் ராஜேந்திரன், புதுச்சேரியில் பிறந்த எழுத்தாளர், கலை விமர்சகர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், ஓவியக் கண்காட்சி அமைப்பாளர்.
He has written 33 books in both Tamil and English, which include collections of poetry, works of translations and books of art criticism.
இவர் ஆங்கிலத்திலும் தமிழுலும் 33 புத்தகங்களை எழுதியிருக்கிறார். இதில் கவிதை புத்தகங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் கலை விமர்சக புத்தகங்கள் அடங்கும்.
Indran has made significant contributions in the Tamil cultural milieu. Most of his writings discuss aesthetics in literature, art and cinema. He has written articles in major English dailies and journals of art and aesthetics. He has produced documentary films- The Sculptural Energy, and A dialogue with painting. He has travelled to reunion islands and European countries at their invitation to literary events.
தமிழ் கலாச்சாரத்துக்கு இவரின் பங்கு இன்றியமையாதது. இவரின் எழுத்து, இலக்கிய, ஓவியம், சினிமா இவற்றின் அழகியலை சார்ந்து இருக்கும். இவர் ஆங்கில ,தமிழ் இலக்கிய ,கலை பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கலை சார்ந்த பல ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டு கொதுலுப், ரீயூனியன் தீவுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்தவர். தமிழர்களுக்கு என்று தனித்துவமான அழகியல் உண்டு என்பதைத் தனது “தமிழ் அழகியல்” எனும் நூலின் மூலம் முன்வைத்தவர்.
He has also translated Indian writing in English, Dalit writing from Kannada, Marathi and Gujarati, Adivasi poetry and third world literature into Tamil. With a travel grant from the Association of British Scholars and British Council, Chennai, he went to the UK to study Indian art object collections in British museums. He has participated in a international poetry meet in Dublin, Ireland.
இந்திய எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த்து மட்டுமன்றி,
இவர் ஆங்கிலம், கன்னடம், மராத்தி மொழிகளிலிருந்து தலித் மற்றும் ஆதிவாசிகளின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவுடன், இங்கிலாந்து சென்று அங்கிருக்கும் அருங்காட்சியங்களில் இருக்கும் இந்தியன் கலை பொக்கிஷங்களை ஆய்வு செய்தார். அங்கே அயர்லாந்து டப்ளின் நகரில் சர்வதேச கவிதை நிகழ்விலும் கலந்து கொண்டார்.
Indran’s landmark translation of Black writings in to Tamil “Araikul Vandhe Africa Vanam” (1982) greatly influenced Tamil writing in the 1980s.
இவர் 1982ல் ஆப்பிரிக்க கவிதைகளின் மொழி பெயர்ப்பான ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’. இதன் தாக்கம் எண்பதுகளின் தமிழ் எழுத்துக்களில் தெரிந்தது.
He was Awarded the Sahitya Akademi Translation Prize for 2011. The national academy of letters selected him for his translation of Odiya poetry (Ethara Gaan Se by Dr Manorama Biswal Mahapatra) in to Tamil titled “Paravaikal Oruvelai Thoongipoi Irukkalaam”.
இவர் 2011ல் சாகித்ய அகடமி விருதைப் பெற்றார். டாக்டர் மனோரமா பிஸ்வால் மஹாபாத்ராவின் ’எத்ர கான் சே’ வை தமிழில் ‘பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம்’ மொழி பெயர்ப்பு தொகுப்புக்காக இந்த விருதைப் பெற்றார்.
He has served on the editorial boards of literary and art magazines
இவர் இலக்கிய ஓவிய பத்திரிக்கைகளில் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்.
He has curated many art shows and one such significant event was an art exhibition during the unveiling of the 133-feet-high statue of Tamil didactic scholar Thiruvalluvar in Kanyakumari. The highlight of the exhibition being participation of 133 painters showcasing as many paintings reflecting the 133 couplets of Thirukkural. The event was organized by the Department of Culture of Tamil Nadu government.
இவர் பல ஓவிய கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். தமிழ் நாட்டில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது , இவர் 133 ஓவியர்களிடம் 133 குறள்களை பிரதிபலிக்கும்133 ஓவியங்களை பெற்று ஒரு பிரம்மாண்ட ஓவிய கண்காட்சியை நிகழ்த்தினார். இதை தமிழக அரசின் கலைத் துறை நடத்தியது
His translation of Sangam novel of K.Chinnappa Bharathi in French will be released during the World Conference on Tamil Literature to be held in Paris. At the conference, his translation of Thirukkural in French and English will also be released.
சின்னப்பா பாரதியின் சங்கம் நாவலின் மொழிபெயர்ப்பு, பாரிஸ் உலக தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இதில் இவரின் ஆங்கிலம், ப்ரெஞ்ச் மொழிகளில் திருக்குறள் மொழிபெய்ர்ப்பு வெளியிடப்பட்டது.
He is also the founder of Yali Foundation, an organisation for the promotion of inter-cultural dialogues in art and literature. He is a visiting professor on Indian Art& History for Shivaji Ganesan Film Institute, SRM University, Chennai.
இவரின் யாளி பதிப்பகம் கலை,இலக்கியம் ,ஒவிய துறைகளை மற்ற கலாச்சரங்களுடன் ஒரு உரையாடலை ஊக்கிவிக்கிறது. இவர் SRM பல்கலை கழகத்தில் வருகைப் பேராசியராக இருக்கிறார்.
இந்திரனின் கவிதைப் பரிசோதனைகள் – ஒரு சுய வாக்குமூலம்
70களில் அறுசீர் விருத்ததிலிருந்து காவடிச் சிந்துவரை பல்வேறு மரபுக் கவிதைகளை “ஞானம்பாடி” எனும் பெயரில் எழுதி வந்த நான், 80களில் நவகவிதை வரிசையில் ”இந்திரன்” என்ற பெயரில் நவீன கவிதை வடிவத்தை எனது ”அந்நியன்” தொகுதியில் பரிசோதனை செய்துப் பார்த்தேன். அதன் பிறகு 90களில் ”முப்பட்டை நகரம்” ( 1991 ) கவிதைகளில் ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிச கவிதைகளின் பாதிப்பில் நகரம் சார்ந்த அனுவங்களைப் பேசும் கவிஞனாக உருமாற்றினேன். ”சாம்பல் வார்த்தைகள்” ( 1994) நெடுங்கவிதையில் லூயிபுனுவல் சினிமாவில் வருவது போன்ற சர்ரியலிசத்தன்மையான படிமங்களாலான சமூகக் கோபத்தை வெளிப்படுத்தும் கவிதையைப் பரிசோதித்துப் பார்த்தேன். இதற்கிடையில் ஆங்கிலத்தில் நேரிடையாக எழுதிய கவிதைகளையும் எழுதி வந்தேன். அவற்றை ”SYLLABLES OF SILENCE”( 1982 ) , ”ACRYLIC MOON” ( 1996) எனும் தொகுதிகளாக வெளியிட்டேன்.
இவற்றில் , ”ACRYLIC MOON” கவிதைகள் நெதர்லாண்டைச் சேர்ந்த ஆண்ட்டினா வெர்பூம் எனும் பெண் ஓவியருடன் சேர்ந்து நான் செய்த ஓவியக் கலை, கவிதைக் கலைரீதியான ஒரு பரிசோதனையில் எழுதப்பட்ட கவிதைகளாகும்.ஒரு பொதுவான ஒரு அனுபவத்தை , அல்லது காட்சியை, அல்லது கருத்தை ஓவியர் ஆண்ட்டீனா ஒரு ஓவியமாகத் தீட்டுவார். நான் அதே விஷயத்தைக் கவிதையாக எழுதுவேன். பிறகு ஓவியமாகத் தீட்டும்போது அந்தக் கலைசாதனம் எதிர்கொள்ளும் வெளிப்பாட்டுப் பிரச்சினைகள் என்னவாக இருக்கின்றன என்றும், கவிதையாக எழுதுபோது எதிர்கொள்ளப்படும் கலைரீதியான பிரச்சினைகள் என்னவாக இருக்கின்றன என்பதை விவாதித்து அதை ஒரு ஆய்வுக் கட்டுரையாக எழுதினோம். பிறகு ஆண்ட்டீனாவின் ஓவியங்களையும் எனது கவிதைகளையும் வைத்து ஒரு ஓவியக் கண்காட்சியை சென்னை ஏ.பி.என் ஆம்ரோ வங்கிக் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தினோம். அந்த ஓவியங்களும், எனது கவிதைகளும் கொண்ட , ”ACRYLIC MOON” தொகுதியை வெளியிட்டோம்.
2003இல் அதிரடி பாரவைப் பண்பாட்டைக் கவிதையுடன் இணைக்கும் ஒரு பரிசோதனையை எனது “மின்துகள் பரப்பு” கவிதைத் தொகுதியாக வெளியிட்டேன். புத்தக அட்டையில் ஒரு காரின் படத்தை வெளியிட்டும், சைக்கிள் எனும் கவிதையின் மூலமும் இந்த யுகத்தில் ஓவியத்தில் இடம்பெற்ற இயந்திரயுக அழகியல் ( Machiune age Aesthetics) என்பதை முன்வைத்தேன்.அதன் முதல் பக்கத்திலேயே ஒரு மண்டையோட்டை வெளியிட்டு “கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது” என்கிற பிகாசோவின் பொன்மொழியை வெளியிட்டு ஒரு எதிர் – அழகியலை நிர்மாணிக்க முன்றேன். ”மிக அருகில் கடல்” (2014 )தொகுதியின் மூலம் பிரெஞ்சுக் கரீபியன் தீவான கொதுலுப் தீவின் அனுபவங்களைப் பேசும் பயண இலக்கியத்தோடு சேர்ந்த ஒரு கவிதைகளை முன் வைத்தேன். ” மேசைமேல் செத்த பூனை “ எனும் கவிதைத் தொகுதியின் மூலம் நிகனார் பர்ராவின் பாதிப்பில் எதிர்- கவிதைகளைன் தொகுதி ஒன்றை முன்வைத்து எழுதிப் பார்த்தேன்.,
படைப்புகள்
கலை விமர்சனம்
-
- 1987 – நவீன கலையின் புதிய எல்லைகள்
- 1989 – ரே :சினிமாவும் கலையும்
- 1994 – தமிழ் அழகியல்
- 1994 – MAN & MODERN MYTH
- 1996 – தற்கால கலை :அகமும் புறமும்
- 1999 – TAKING HIS ART TO TRIBALS
- 2001 – தேடலின் குரல்கள் : தமிழக தற்கால கலைவரலாறு
- 2005 – நவீன ஓவியம்
- 2010 – கலை – ஓவியம் , சிற்பம் பற்றிய கட்டுரைகள்
கவிதை
-
-
- 1972 – திருவடி மலர்கள்
- 1982 – SYLLABLES OF SILENCE
- 1982 – அந்நியன்
- 1991 – முப்பட்டை நகரம்
- 1994 – சாம்பல் வார்த்தைகள்-நெடுங்கவிதை
- 1996 – ACRYLIC MOON
- 2002 – SELECTED POEMS OF INDRAN
- 2003 – மின்துகள் பரப்பு
- 2016 – மிக அருகில் கடல்
- 2018 – மேசை மேல் செத்த பூனை
-
மொழிபெயர்ப்பு
-
-
- 1982 – அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்-ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்க இலக்கியம்.
- 1986 – காற்றுக்குத் திசை இல்லை-இந்திய இலக்கியம்
- 1994 – பசித்த தலை முறை- மூன்றாம் உலகஇலக்கியம்
- 1995 – பிணத்தை எரித்தே வெளிச்சம்- தலித் இலக்கியம்
- 2002 – KAVITHAYANA – TRILINGUAL COLLECTION OF ORIYA POETRY
- 2003 – கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்-ஆதிவாசிகவிதைகள்
- 2003 – மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள்-ஒரிய கவி
- 2011 – பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் (சாகித்திய அக்காதமி விருது)
-
தொகுப்பு
-
- 2000 – இந்திரன்: கவிதை, ஓவியம், சிற்பம் ,சினிமா
- 2000 – வேரும் விழுதும்: தற்கால மக்கள் பண்பாடு
- இந்திரன் நடத்திய போபால் மனித இன அருங்காட்சியகத்திற்கான கருத்தரங்கக் கட்டுரைகள்
- 2002 – புதுச்சேரி: மனசில் கீறிய சித்திரங்கள்
நினைவுக் குறிப்புகள்
- 2008 – இந்திரன் காலம்: ஓர் இலக்கிய சாட்சியம்
உரையாடல்
- 2000 – MAN AND MODERN MYTH: INDRAN WITH S.CHADRASEKARAN EMINENT ARTIST FROM SINGAPORE
- 2004 – கவிதை அனுபவம் : இந்திரன் / வ.ஐ.ச.ஜெயபாலன்
இதழாசிரியர்
- 1976 – வெளிச்சம்
- 1992 – THE LIVING ART-AN ART MAGAZINE
- 1999 – நுண்கலை- ஓவிய நுண்கலைக்குழுவின் கலைஇதழ்
குறும்படங்கள்
- 2008 – A DIALOGUE WITH PAINTING-30
- 2008 – THE SCULPTURAL DIALOGUE
அமைத்த கண்காட்சிகள்
- 1994 – THE CITYSCAPES;DRAWINGS OF S.KANTHAN AT CHOLA SHERATAN GALLERY, CHENNAI ( ஓவியர் S.கந்தனின் ஓவியக் கண்காட்சி)
- 1995 – GANESHA CONSCIUSNESS-WORKS OF K.M.GOPAL AT JEHANGIR ART GALLERY MUMBAI (கணேசா உணர்வு நிலை – ஓவியர் கே,எம்.கோபாலின் படைப்புகள் – ஜஹாங்கீர் ஓவிய கலைக் காட்சி கூடம்)
- 1996 – CULTURAL DIALOGUE: ANTINA VERBOOM FROM NETHERLAND& A.V. ILANGO FROM INDIA AT ABN AMRO BANK GALLERY, CHENNAI ( கலாச்சார உரையாடல்- ஆண்டினா வெர்ப்ரூம், நெதர்லாந்து மற்றும் A.V.இளங்கோ)
- 1997 – GANAPATHIYAM: WORKS OF K.M.GOPAL AT CHITHRAKALA PARISHAD , BANGALORE (கணபதியம் –K.M.கோபாலின் படைப்புகள்)
- 1999 – A RETROSPECTIVE SHOW OF A.PERUMAL FROM SHANTINIKETAN (ஏ.பெருமாள் பற்றிய காட்சி)
- 1999 – A WRITERS AND PAINTERS MEET FOR PALLAVA ARTISTS VILLAGE AT LALIT KALA AKADEMI CHENNAI (பல்லவா கலைஞர் கிராமத்துக்காக ,எழுத்தாளர்கள் , ஓவியர்களின் சந்திப்பு @ லலித் கலா அகடெமி, சென்னை)
- 2000 – A MEGA SHOW OF 133 PAINTERS ON THIRUKURAL FOR TAMILNADU GOVERNMENT CULTURAL DEPARTMENT AT KANYAKUMARI ( தமிழக அரசு கலாச்சாரத் துறையின் சார்பில் 133 ஓவியர்களின் திருக்குறள் சார்ந்த ஓவியங்களின் பிரம்மாண்ட கண்காட்சி
- 2012 July 9 – ART TAMOUL – AN EXHIBITION OF 20 TAMIL PAINTERS IN SELECTIVE ART GALLERY , PARIS , FRANCE (20 தமிழ் ஓவியர்களின் கண்காட்சி @ பாரிஸ், ஃப்ரான்ஸ்
- 2018 – A TRIBUTE TO INDRAN – AN EXHIBITION OF 40 ARTISTS CELEBERATING 70TH YEAR BIRTHDAYOF INDRAN – SHOW INAUGURATED BY KIREN BEDI, HONOURABLE Lt. GOVERNOR OF PONDICHERRY – பாண்டிச்சேரி ஆளுனர் கிரன் பேடி தலைமையில் இந்திரனுக்கு 70வது பிறந்த நாள் பாராட்டு விழா- 40 ஓவியர்களின் கண்காட்சி;
- 2018 – A TRIBUTE TO INDRAN – AN EXHIBITION OF PORTRAIT PAINTINGS OF INDRAN AT RUSSIAN CULTURAL CENTRE, CHENNAI. இந்திரனுக்கு பாராட்டு விழா . இந்திரன் உருவப் பட கண்காட்சி @ ரஷிய கலாச்சார அரங்கம்
நடத்திய கருத்தரங்குகள்/ ஆய்வுகள்/ பட்டறைகள்
- 2000 – வேரும் விழுதும் :இந்திரா காந்தி ராஷ்ட்ரீய மானவ் சங்கராலயா, போபால்
- 2002 – கவிதாயனா:20 ஒரியக் கவிஞர்/தமிழ்கவிஞர் சந்திப்பு
- 2003 – ஒரிசாவின் படசித்ர பட்டறை
- 2003 – The spirit of Madras School of Art
- 2004 – A PHOTO DOCUMENTATION OF PAINTING AND SCULPTURE OF TAMILNADU FOR STATE LALIT KALA AKADEMI TAMILNADU (தமிழ் ஓவியம் , சிற்பம் பற்றி புகைப்பட தொகுப்பு- தமிழ் நாடு லலித் கலா அகடெமி)
- 2019 CHENNAI THAMIZH – A SEMINAR ON THE LANGUAGE OF CHENNAI BY WORLD CENTRE FOR TAMIL CULTURE IN COLLABORATION OF UNIVERSITY OF MADRAS .(சென்னைத் தமிழ்- சென்னையின் தமிழ் பற்றி கருத்தரங்கு)
- 2019 A SEMINOR ON THAMIZH AZHAKIYAL – SAHITYA AKADEMI IN COLLABORATION OF PERIYAR UNIVERSITY , SALEM (தமிழ் அழகியல் கருத்தரங்கு – சாகித்ய அகடெமி , பெரியார் பல்கலை கழகம் கலந்து நடத்தியது)